
உ சிவமயம் ஓம் நமசிவாய ஆன்மீகச் செல்வர்கள், பக்த அன்பர்களுக்கு பணிவான திருப்பணி வேண்டுகோள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது மிகப் பழமைவாய்ந்த ஸ்தலமான (திருப்பெருந்துறை) ஆவுடையார் கோயில். ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாத ஸ்வாமி, ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு குருவாய் குருந்தமரத்தடியில் அமர்ந்து உபதேசித்து அருளிய «க்ஷத்ரம். “நமச்சிவாய வாழ்க” என ஆரம்பித்ததும், திருப்பெருந்துறை என்று சொல்லப்பட்டதும், இன்று உலகளவில் புகழப் பெறுகின்ற ஸ்ரீ மாணிக்கவாசக ஸ்வாமிகள் திருவாய் மலர்ந்தருளிய தெய்வப்பதிகமான திருவாசகம் மலர்ந்ததும் இப்புனித பதியேயாகும். “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது ஆன்றோர் வாக்கு. பெருமைமிகு இந்த ஸ்தலம், திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. 1990ம் ஆண்டு இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக