வியாழன், 27 மார்ச், 2014

செண்பகப்பொழில் தென்காசி ஆன கதை


செண்பகப்பொழில் என்றால் செண்பக மரம் நிறைந்த மழைக்காடுகள் என்று பொருள்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம்[10] செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் அதற்கு நிகரானதோர் நகரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது

  1. சச்சிதானந்தபுரம்
  2. முத்துத்தாண்டவநல்லூர்
  3. ஆனந்தக்கூத்தனூர்
  4. சைவமூதூர்
  5. தென்புலியூர்
  6. குயின்குடி
  7. சித்தர்வாசம்
  8. செண்பகப்பொழில்
  9. சிவமணவூர்
  10. சத்தமாதரூர்
  11. சித்திரமூலத்தானம்
  12. மயிலைக்குடி
  13. பலாலிங்கப்பாடி
  14. வசந்தக்குடி
  15. கோசிகை
  16. சித்தர்புரி


நன்றி:விக்கி பீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக