புதன், 26 மார்ச், 2014

தென்காசி ஆலயச்சிறப்பு


வாயுவாசல் (சடையவர்மன் பராக்கிரம்ம பாண்டியன் வாயில்)[தொகு]

    • இக்கோபுர நுழைவாசலமைப்பு வாயுவாசலெனப்படும். அச்சன்கோயில், ஆரியங்கா வழிவரும் தென்பொதிகை தென்றல் இவ்வாயுவாசல் வழி வருகிறது. இதனால் ஆடி எதிர்காற்றில் இங்கு நுழைவது கடினம். பால சுப்பிரமணியர் கோயில் வெளியில் இசைத்தூண்கள் உண்டு.

    ஒற்றைக் கல் சிலைகள்[தொகு]

    மூலம்:தமிழ்வு[2]
    இறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள திருஓலக்க மண்டபத்தில் தமிழ்நாட்டிலுள்ள சிற்ப அதிசயங்கள் சிலவற்றைக் காணலாம். இம்மண்டபத்தில் பின்வரும் 16 வியத்தகு சிலைகள் உள்ளன.
    1. அக்னி வீரபத்திரர்
    2. ரதிதேவி
    3. மகா தாண்டவம்
    4. ஊர்த்துவ தாண்டவம்
    5. காளிதேவி
    6. மகாவிஷ்ணு
    7. மன்மதன்
    8. வீரபத்திரர்
    9. பாவை
    10. பாவை
    11. தர்மன்
    12. பீமன்
    13. அர்ச்சுனன்
    14. நகுலன்
    15. சகாதேவன்
    16. கர்ணன்
    • மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை. நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை பாண்டியர் காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகள். அளவிலும், அழகிலும் இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை எனலாம்.தென்காசி கோவிலின் சிற்பங்கள் தென்காசி ஆண்ட பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய கலைச் செல்வங்கள்.

    சுரங்கப்பாதைகள்[தொகு]

    தற்போதும் பெரிய கோயிலில் அடைக்கப்பட்ட சுரங்கப்பாதை நுழைவாயில் காணப்படுகிறது. இதில் நான்கு சுரங்கப்பாதைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
    1. கிழக்கு நோக்கி செல்லும் சுரங்கப்பாதை சுந்தரன் பாண்டியபுரத்தில் உள்ள விந்தன்கோட்டைக்கு செல்வதாக தற்போதும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.[13]
    2. மற்றொரு பாதை குலசேகர நாதர் கோவில் வழியாக செல்வதாகக் கூறப்படுகிறது.
    நன்றி:விக்கி பீடியா

      கருத்துகள் இல்லை:

      கருத்துரையிடுக